அதிரை வந்த இந்தோனேசியா ஜமாத்தினர் கடும் போராட்டத்துக்கு பிறகு தாயகம் செல்கின்றனர்

தமிழகத்திற்கு 9 நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 தப்லீக் ஜமாத்தினர் அதிரை உட்பட 15 இடங்களில் தங்கி இருந்தனர். கொரோனாவை பரப்பியதாக இவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், எஸ்.டி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இவர்கள் அனைவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை 3 மாதங்களுக்கு முன் பிணை வழங்கியது. இருப்பினும் இவர்கள் விடுவிக்கப்படாமல் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிளை சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.

பின்னர் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும் சென்னையில் உள்ள ஹஜ் கமிட்டியில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கியுள்ளதை அடுத்து ஒவ்வொரு ஊர்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு ஜமாத்தார்களும் சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு படிப்படியாக தாயகம் புறப்பட்டனர். 

அந்த வகையில் அதிரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 12 இந்தோனேஷிய தப்லிக் சாத்திகள் மீதாக வழக்குகளை தப்லீக் ஜமாஅத்தின் துணையோடு மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் வழிகாட்டுதல் அடிப்படையில் SDPI வழக்கறிஞரணியின் மாநில செயலாளர் ராஜா முஹம்மது மற்று. வழக்கறிஞர்கள் சபியா, முஹம்மது இஸ்மாயில், ராஜ்முஹம்மது, முஹம்மது தம்பி ஆகியோரின் உதவியோடு குற்றவியல் வழக்குகளை முடித்து அவர்கள் இன்று் தாய்நாடு் திரும்பினார்கள்.

இதை போன்று நீடுரில் கைது செய்யபட்ட பிரான்ஸ் மற்றும் இதர நாட்டினர் வழக்கும் நமது வழக்கறிஞர்கள் குழு முடித்து வைத்து அவர்கள் தாய்நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments