அதிரை இளைஞரின் சூப்பர் சேவை... இனி இலவசமாக ஜனாசா பொருட்கள் கிடைக்கும்

Editorial
0
அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் சா.சம்சுல் ரஹ்மான். சமூக ஆர்வலரான இவர் தொடர்ந்து பல சமூக பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், நமதூர் மக்களுக்கு நிரந்தரமாக உதவும் பயனுள்ள காரியம் ஒன்றை செய்ய நினைத்த சம்சுல், ஜனாசா குளிப்பாட்ட தேவையான மரக்கட்டில், ட்ரம், ஜனாசா வைக்கும் ப்ரீஜர், மக்கள் அமர்வதற்கான சாமியானா பந்தல், கூடாரம், நாற்காலிகள், எல்.இ.டி. விளக்கு, தேனீர் கேன் போன்ற 8 வகை பொருட்களை எந்த வாடகை கட்டணமும் இன்றி வழங்க முடிவு செய்தார்.
இதை நிர்வகிப்பதற்காக "அதிரை ஒற்றுமை நலச்சங்கம்" என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் சம்சுல் ரஹ்மான். இதன் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக இதன் திறப்பு விழாவுக்கு அதிரை பைத்துல்மால், பெரிய ஜும்மா பள்ளி, தக்வா பள்ளி, கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி, மரைக்கா பள்ளி நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நம்மிடையே பேசிய சம்சுல் ரஹ்மான், "எந்த தெரு, இயக்கத்தை சேர்ந்தவர்களும் இந்த பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், எவ்வித பாகுபாடும் இன்றி இந்த பொருட்கள் வழங்கப்படும். தேவை அதிகமானால் பொருட்களை மேலும் வாங்கப்படும் என்றும், இந்த சங்கம் மூலம் ஏழை வீட்டு திருமணங்களுக்கு மட்டும் நாற்காலிகள், மின் விளக்குகள் வழங்கப்படும். தேவைப்படுவோர் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொண்டு டெம்போவை மட்டும் அழைத்து வந்து பொருட்களை எடுத்து செல்லலாம்." எனவும் தெரிவித்தார்.

தொடர்புக்கு: 80563 22376, 90922 82689

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...