அதிரை ஷிபா மருத்துவமனையின் அறிவிப்பும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வியும்

Editorial
0
அதிரை ஷிபா மருத்துவமனை மீண்டும் தொடங்கப்பட்டு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது. கொரோனா பரவல் தொடக்க காலத்தில் அதிரை பெண்களுக்கு பிரசவம் பார்க்க பட்டுக்கோட்டை, தஞ்சை மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்த சூழலில் ஷிபா மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதனால் அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர் மக்களின் நம்பிக்கைக்கு உரிய மருத்துவமனையாக மாறியது ஷிபா மருத்துவமனை.

ஆனால், அண்மை காலங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை வைத்து ஷிபா மருத்துவமனை மீது பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அவசர அறுவை சிகிச்சைக்காக வந்த ஒரு பெண்ணை கொரோனா சோதனை செய்து வர அனுப்பி வைத்து அந்த பெண் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இதுபோன்ற சில குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து முன் வைக்கப்பட்டு வந்த சூழலில் தான் கீழ்காணும் ஒரு அறிவிப்பை ஷிபா மருத்துவமனை வெளியிட்டது.
அதிரை மக்களின் நம்பிக்கைக்குறிய மருத்துவமனையாக திகழ்ந்த ஷிபாவின் அறிவிப்பு பலரை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. அதே போல் தெளிவற்ற இந்த அறிவிப்பால் மக்கள் குழம்பியுள்ளனர்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட ஷிபா மருத்துவமனை இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் அளவுக்கு மருத்துவர் தரப்பில், அரசு தரப்பில் நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறது. 

இதே நேரத்தில் இதுதொடர்பான ஒரு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், "தனியார் மருத்துவமனைகளில் மாரடைப்பு உள்ளிட்ட  நோய்களுக்காக வருவோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்க அகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனத்னர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த கேள்வியை நாம் உற்று நோக்க வேண்டும். சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாக உத்தரவு படி ஷிபா மருத்துவமனை இதை வெளியிட்டதா? ஆம், என்றால் அதற்கான உத்தரவு நகலையோ அல்லது எண்ணையோ குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

அல்லது மருத்துவர்கள் அழுத்தம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றால் உடனடியாக மாற்று வழியை காண வேண்டும். அதே நேரம் இதுபோன்ற சூழல்களை மட்டும் வைத்து ஷிபாவை மக்களுக்கு எதிரான மருத்துவமனையாக சித்தரிக்க முயல்வதும் கலங்கம் கற்பிப்பதும் தவறு. அதே நேரம் முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் காதில் கேட்டதை வைத்து சமூக வலைதளங்களில் பகிர்வதையும் ஏற்க இயலாது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...