இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரே நாளில் 117 பேருக்கு தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 952-ஆக அதிகரித்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 453 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி... ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு
July 17, 2020
0
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இருந்த பாதிப்பு மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் கட்டுக்குள் இருந்த பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.