அதிரை சிஸ்வா கிராஅத் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு.. வெற்றியாளர்கள் அறிவிப்பு

Editorial
0
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கோரோனாவின் முடக்கங்களுக்கிடையில் வாட்சப் மூலம் SHISWA (Shamsul Islam Sangam Welfare Association) அமீரக கிளை சார்பில் கிராஅத் போட்டி நடத்தப்பட்டது.

இதில், உலகெங்கும் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் பிள்ளைகள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு கிராஅத் ஓதும் வீடியோவை பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.

நிறைவடைந்த இப்போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், இன்று ஜூன் 5-ம் தேதி கிராஅத் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

 M.S.சஹல் அவர்களின் அழகொய குரலில் கிராஅத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிஸ்யா செயலாளர் 
M.F.முஹம்மது சலீம் வரவேற்புரை ஆற்றினார். ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜி.M.A.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும், சங்க தலைவர் ஹாஜி.M.S.M.முஹம்மது அபூபக்கர் அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. மெளலானா.A.S.அஹ்மது இப்ராஹீம் அவர்கள் இப்போட்டி நடத்தப்பட்ட முறை மற்றும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் பற்றி விளக்கினார்கள். மௌலானா.M.S.அப்துல் ஹாதி முப்தி அவர்கள் குர்ஆன் ஓதுதலின் சிறப்புகள் பற்றி சிற்றுரை வழங்கினார்கள்

முக்கிய நிகழ்வான வெற்றி பெற்றவர்களின் விபரத்தை சங்க செயலர் ஹாஜி M.A.அப்துல் காதர் அவர்கள் அறிவித்தார். அப்போது பேசிய அவர் இந்த போட்டியில் பங்கேற்ற 464 பேருக்கும் பரிசு வழங்கப்படும் என்றார். இறுதியாக சிஸ்யா தலைவர் எஸ்.அஹமது அனஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. 


வெற்றியாளர்கள் விபரம்:

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...