கிராஅத் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் அதிரை சிறுவன் அஜீம்

Editorial
0
அதிரையை சேர்ந்தவர் அப்துல் காதர். அபுதாபி பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் அஜீம், அபுதாபி குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஷிஸ்வா அமீரக கிளை நடத்திய கிராஅத் போட்டியில் கலந்துகொண்டு 8 முதக் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து கிராஅத் மற்றும் குர்ஆன் தர்தீல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்.

◾தமிழ்நாடு பீஸ் அகாடமி நடத்திய தர்தீல் போட்டியில் முதலிடம்.

◾அபூதாபி மலையாளி சமஜாம் நடத்திய போட்டியில் மூன்றாமிடம்.

◾ துபாய் எதிசலாத் கிராஅத் போட்டியில் 3 வயதிலேயே முதலிடம்.

மார்க்க கல்வி மட்டுமின்றி பள்ளி பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை அஜீம் பெற்றுவருகிறார். இவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...