அதிரை மக்களுக்கு ஓர் நற்செய்தி... நம்ம ஊரு FREE ஆனது - சேர்மன் வாடி தடுப்புகள் அகற்றம்

Editorial
0
  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்  வெளியாட்கள் செல்ல முடியாதவாறு சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் அதிராம்பட்டினத்திலும் சில பகுதிகள் வெளிநபர்கள் புகாதவாறு அடைக்கப்பட்டன. அந்த வகையில் அதிரையிலும் சில பகுதிகள் அவ்வாறு அடைக்கப்பட்டன. குறிப்பாக அதிரையின் முக்கிய பகுதியான சேர்மன் வாடி அடைக்கப்பட்டதால் மெயின் ரோடு வழியான வாகன போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் வருவதால் அதிரை இந்தியன் வங்கியே செயல்படாமல் மூடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாததன் காரணமாகவும், கொரோனா நோயாளிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளதாலும் கண்டெய்ன்மெண்ட பகுதியில் இருந்து வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் சேர்மன் வாடி அடைப்பு அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் ஆறுதல் அடைந்து உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...