அதிரையில் வீட்டுக்கு செல்லும் நடைபாதையை காணவில்லை எனப்புகார்

Editorial
0
அதிரை அம்பேத்கர் நகரில் உள்ள 54/3 என்ற கதவு எண் கொண்ட வீட்டுக்கு செல்வதற்கான பாதை முழுவதும் அடைபட்டு கிடக்கிறது. அந்த பாதையின் கடைசி வீடாக அது உள்ளது. அடுத்தடுத்த வீடுகள் அதை கொல்லை பாதையாக பயன்படுத்துவதால் தூய்மை பணியாளர்கள் அந்த பாதையை துப்புரவு செய்யாமல் விட்டுச்செல்வதாக புகார் தெரிவிக்கின்றனர். பாதையில் இடிந்த கற்கள் கொட்டப்பட்டு, புதர் மண்டி, குப்பை மேடாக காணப்படுவதால் தங்கள் வீட்டுக்கு செல்லவோ, வீட்டை விட்டு வெளியேறவோ முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இருசக்கர வாகனம் கூட அந்த வீட்டுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தவறாமல் வரிகட்டுகிறோம், இருப்பினும் இதுகுறித்து பேரூராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் போதிய நடவடிக்கை என சம்பந்தப்பட்ட வீட்டார் வேதனை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...