அதிரை இந்தியன் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? இந்த சேவை உங்களுக்காக...

கண்டெய்ன்மெண்ட் பகுதிக்குள் வருவதால் இந்தியன் வங்கி அதிரை கிளை பூட்டப்பட்டுள்ளது. இதனால் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் விதமாக அதிரை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் கடைத்தெருவில் உள்ள ஹர்ரா மல்டி சர்வீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில்  அவசரத் தேவைகளுக்கு (ரூ.10,000/-) வரை எடுத்துக் கொள்ளவும், டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அதிரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், பணம் எடுக்க/செலுத்த வருபவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புக்கு: 8220598365

Post a Comment

0 Comments