அதிரையில் மின் தடையால் நோகும் நோன்பாளிகள்... 2 மணி நேரம் ஆகுமாம்...

Editorial
0
அதிரையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்றைய தினம் மின் பராமரிப்பு பணிக்காக காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தாமதமாகவே மின் விநியோகம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் மின் விநியோகம் அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் மின்சாரம் தடைபட்டு உள்ளதால் ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் இந்த கோடை காலத்தில் பரிதவித்து வருகின்றனர்.

தற்போது செய்யப்பட்டுள்ள மின் தடை பற்றி அதிரை பிறை சார்பாக, துணை மின் பொறியாளரை அழைத்து பேசினோம். அப்போது பேசிய அவர், உள்நோக்கத்துடன் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மதுக்கூருக்கு வரும் மின்சார லைனில் திடீரென பழுது ஏற்பட்டு உள்ளது. அது சீர் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகம் சீராக சுமார் 2 மணிநேரம் ஆகும் என்றார். நேற்றைய தினம் வேறொரு லைனில்சீர் செய்யப்பட்டதாவும், தற்போது பழுதாகியுள்ளது வேறொரு மின் லைனில் என்று அவர்கள் விளக்கமளித்தார். கோடைகாலம் என்பதால் அதிக மின்பயன்பாடு காரணமாக இதுபோன்ற பழுது ஏற்படுமா என்று நாம் எழுப்பிய கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...