அதிரையை சேர்ந்த மேலும் 2 பேர் தஞ்சை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

- File image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவையாறு, திருவோணம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 55 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களில் நேற்று வரை 35 பேர் வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த மேலும் 2 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து வரு சிலர் ஊர்களை சேர்ந்தவர்கள் என மொத்தமாக 41 பேர்  தஞ்சை மாவட்டத்தில் இருந்தகுஉ குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமைடைந்து வீடு செல்லும் நபர்கள் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Post a Comment

0 Comments