அதிரை பிறைக்கு மகத்தான ஆதரவு அளித்த அதிரை மக்கள்

Editorial
0
அதிரை மக்களுக்காக கடந்த 2012-ம் ஆண்டு ரமலான் தலைப்பிறை அன்று சிறிய அளவில் தொடங்கப்பட்டு மக்களாகிய உங்களின் பேராதரவுடன் செயல்பட்டு வந்த அதிரை பிறை இணையதளம் 2018-ம் ஆண்டு டிசம்பர் 31 உடன் நியூசு என்ற பெயரில் மாற்றப்பட்டு www.newsu.in என்ற இணைய முகவரியுடன் அதிரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கான தளமாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த நியூசு தளம் தற்போது பல முன்னணி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்களின் பங்களிப்புடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

இருப்பினும் 7 ஆண்டுகளாக அதிரை மக்களோடு ஒன்றோடு ஒன்றாக இருந்த அதிரை பிறை தற்போது இல்லாதது மக்களுக்கும், அதை நடத்தி வந்த குழுவுக்கும் மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது.  15 மாதங்கள் கடந்துவிட்டாலும் நமதூர் மக்கள் அதிரை பிறையை மறக்கவில்லை. மீண்டும் அதிரை பிறையை தொடங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதிரையில் பிற ஊடகங்களில் வராத நமது பார்வைக்கு வரும் பல பிரச்சனைகளை அதிரை பிறையில் வெளியிட்டு வந்தோம். புதிதாக மாற்றப்பட்ட நியூசுவில் அவ்வாறு நம்மால் வெளியிட முடியாது. எனவே மீண்டும் அதிரை பிறையை தொடங்கலாம், வழக்கம்போல் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவுகளை பகிரலாம் என்ற எண்ணம் எழுந்தது. இதனால் மீண்டும் அதிரை பிறையை முடிவு செய்து பழைய குழுவை ஒருங்கிணைத்து புதிதாக சிலரை இணைத்து அதிரை பிறையை தொடங்கி இருக்கிறோம். தளத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தவுடன் எப்போதும் வரும் என காத்திருந்த நிலையில் தலைப்பிறையுடன் மீண்டும் தொடங்கினோம்.

அன்றிலிருந்து கடந்த 3 நாட்களாக எந்த ஊடகங்களிலும் அதிகம் வெளிவராத முக்கிய செய்திகளை வெளியிட்டு வருகிறோம். இது சமூக தளங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் விவாதப் பொருளாக நமது செய்திகள் மாறியுள்ளன. இது போன்ற செய்திகளுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பின் காரணமாக நமது தளத்துக்கு வெறும் 3 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகைதந்து உள்ளனர்.

நமது பழைய தளத்தை மாற்றும் போது அலெக்சா ரேட்டிங்கில் அதிரை இணையதளங்களில் அதிரை பிறை முதலிடத்தில் இருந்தது. அந்த வரவேற்பு கிடைக்குமா என சந்தேகித்த நிலையில், நாங்கள் அதிரை பிறையை இன்னும் மறக்கவில்லை என்பதை உறக்க சொல்லியுள்ளனர் மக்கள். உங்களுக்காக நமது சமூகப் பணிகள் என்றும் தொடரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...