அதிரையில் பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்கள்

Editorial
0
அதிராம்பட்டினம் என்றால்  'ஆட்டை கழுதையாய் மாற்றிய ஊர்' என்பது மட்டும் தான் நாம் எல்லோருக்கும் தெரியும். அதைபோல கொத்தனாரை கூட இன்ஜினியராய் மாற்றிய ஊர் இது.

அதிரையில் சில வருடங்களாக பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஏமாற்று வேலையில் ஈடுப்பட்டு வருபவர்கள் பலர் அதிரையை சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு மாணவனும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு ஊர்களில் கல்லூரி படிப்பை படித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் பலர், பல சிரமங்களையும் தாண்டி பல்வேறு இன்ஜினியரிங் படிப்பு படித்து, பட்டம் பெற்றும் அவர்களை இன்ஜினியர் என எவரும் அழைப்பதில்லை. காரணம், அவர் சிவில் இன்ஜினியர் படிக்காமல் மற்ற இன்ஜினியரிங் படித்துள்ளாராம். ஆகையால் அவர்களை இன்ஜினியர் என அழைப்பதில்லை.

இம்முறை படி பார்த்தால் சிவில் இன்ஜினியர் படித்தவர்களை மட்டும்தான் இன்ஜினியர் என அழைக்கவேண்டும். இதை விட்டுவிட்டு கட்டுமான செலவுகளை தெரிந்து வைத்தவரை கூட இன்ஜினியர் என அழைக்கின்றனர். 

அவர்களும் அந்த இன்ஜினியர் என்ற பெயரை வெட்கமின்றி தன்வசம் ஆக்கிவரிகின்றனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் பெயர் எழுதும்போதும் கூட இன்ஜினியர் என்று சேர்த்து பெயர் எழுதுகின்றனர். உதாரணமாக Er.________BE & DCE என்று எழுதுகின்றனர். இவ்வாறு செயல்படுவதை தவிர்த்து  நேர்மையான முறையில் செயல்பட அல்லாஹ் அவர்களுக்கு உதவிபுரிவானாக ஆமின்..

ஆக்கம்: இர்ஷாத் பின் ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...