ஊரடங்கை மதித்து நம் குழந்தைகளுடன் வீடுகளில் தராவீஹ் தொழுகலாமே..!

Editorial
0
இன்று தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது அடுத்து ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. நன்மைகளை அள்ளித்தரும் ரமலான் மாதத்தை மக்களாகிய நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதே சூழலில் உலக அளவில் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நமது நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினத்தில் மக்கள் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வெளியில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மே 3 வரை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து நீட்டிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. 

இதனால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருக்கும் பள்ளிவாசல்கள் இந்த ரமலானிலும் பிராத்தனைகளுக்காக திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரமலான் பிரார்த்தனைகளை வீடுகளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழக தலைமைக் காஜி, தலைமைச் செயலாளருடன் நடத்திய கூட்டத்துக்கு பிறகு அறிவித்தார். இந்த அறிவிப்பு பள்ளிவாசல்கள் மட்டுமின்றி வீடுகளில் பெண்களால் கூடி நடத்தப்படும் தராவீஹ் தொழுகைக்கும் பொருந்தும். இதனால், தராவீஹ் தொழுகையை எப்படி நடத்துவது என மக்கள் குழம்பி வருகின்றனர். ரமலான் மாதத்தின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படும் தராவீஹ் இம்முறை நமக்கு வாய்க்காதா என பலர் ஏங்குகின்றனர்.  

அவர்கள் நமதூரில் குர்ஆன் மனனம் செய்துள்ள இளம் ஹாஃபிழ்கள், மனனம் செய்துவரும் மாணவர்கள், இறுதி ஜுஸ்வை மனனம் செய்தவர்கள் அல்லது சில சூராக்கள் மட்டும் மனப்பாடம் செய்து வைத்துள்ள தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வைத்து முறையாக தராவீஹ் தொழுகை நடத்தலாம். இதுபோன்ற சிறுவர்கள் நம்மில் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள். அவ்வாறு இல்லாவிட்டால், சூராக்களை மனனம் செய்து வைத்திருக்கும் ஆண்கள், பெண்களே தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு தொழுகையை நடத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம், அரசின் உத்தரவை பின்பற்றி கூட்டம் கூடுவதை தவிர்த்தது, தராவீஹ் தொழுகையின் நண்மையை அடைந்தது, வீட்டு சிறுவர்களை இமாமத்து செய்ய வைத்தது என பல நண்மைகள் கிடைக்கும். உலகக்கல்வி அல்லது வேறு சில காரணங்களுக்காக பாதியில் குர்ஆன் மனனம் செய்வதை நிறுத்தியவர்களுக்கு இது ஒரு REVISION ஆக இருக்கும். மேற்கொண்டு குர்ஆன் ஓதவும், மனனம் செய்யவும் ஆர்வம் ஏற்படும். குறிப்பாக தராவீஹ் நேரத்தில் சிறுவர்கள் தேவையின்றி வெளியில் செல்வதையும், சுற்றுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.

அல்லாஹ்வின் உதவியால் கொரோனாவை மே 3-ம் தேதிக்குள் விரட்டி பழைய புத்துணர்ச்சி, கலகலப்புடன் ரமலானை நிறைவு செய்து நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம்.

ரமலான் தலைப்பிறையுடன் உங்களுக்காக மீண்டும் உதயமாக உள்ளது #அதிரை_பிறை.

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பேஸ்புக்கில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்திடுங்கள்.

Adirai Pirai
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...