நம்ம மாவட்டத்தில் இனி பைக், கார்களில் செல்ல தடை - போலீஸ் எச்சரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் பைக்குகள், கார்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
"தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுமதி அட்டையின்படி பச்சை நிற அட்டையை திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும், ஊதா நிற அட்டையை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் மற்றும் ரோஸ் நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனுமதி

அட்டையை நடந்து சென்று மட்டுமே அத்தியாவாசியப் பொருட்களை வாங்க பயன்படுத்த வேண்டும் வாகனங்களில் செல்ல கூடாது மேலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களாக இருந்தால் மட்டுமே வாகனங்களில் செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி அட்டையினை பெற்று பயன்படுத்த வேண்டும். எனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள வண்ண அனுமதி அட்டையினை நடந்து சென்று அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே முறையாக பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது."

Post a Comment

0 Comments