அதிரைக்கு சென்னையிலிருந்து வார விடுமுறையில் வருவோருக்கு குட் நியூஸ்.. வந்தாச்சு புதிய சிறப்பு ரயில்

Editorial
0


Ads: Crescent builders

வரும் ஜூன் 21 முதல் வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஜூன் 22 முதல் சனி, திங்கள் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்தும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் ரயில் பண்ருட்டிக்கு இரவு 9:31 க்கு பண்ருட்டி வந்து மறுநாள் காலை 7:00 மணிக்கு ராமநாதபுரம் சென்று சேரும். ராமநாதபுரத்தில் மதியம் 03:00 க்கு புறப்படும் ரயில் பண்ருட்டிக்கு இரவு 11:23 க்கு வந்து மறுநாள் அதிகாலை 03:15 க்கு தாம்பரம் செல்லும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ஊர்களில் நின்று செல்லும். தற்காலிகமாக வாரம் இருமுறை என 6 வாரங்கள் மட்டுமே இது இயக்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...