அதிரை இமாம் ஷாபி பள்ளி சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

Editorial
0

சென்னை வெள்ளத்தில் சிக்கி உள்ள நபர்களை மீட்பு குழுவினர், படகு மூலம் மீட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் 50 நிவாரண முகாமில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில்  மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக சார்பிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் சிக்கி உள்ளனர். மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு வேனில் அரிசி, பிரட், ஜாம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகிகள் பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் வழங்கினார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...