இந்த மருத்துவ கழிவுகள் பெரும்பாலான பகுதிகளில் முறையாக கையாளப்படாமல் உள்ளன. சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள மருத்துவ கழிவுகள், அதிரையிலும் அதிகரித்து ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை காண முடிகிறது.
இந்த நிலையில் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள கிளினிக்கில் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் சாலையிலேயே சிதறிக் கிடந்தன. ஊசி, காலியான மருந்து பாட்டில்கள், பாக்கெட்டுகள், காட்டன் பஞ்சுகள் என அனைத்தும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் கிடந்தன.
ஊசி மூலமாக எய்ட்ஸ் உள்ளிட்ட பெரும் நோய்கள் பரவும் நிலையில் இதுபோன்று மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாத கிளினிக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.