அதிரையில் மின்னல் வேகத்தில் பறந்த ரயில்.. 121 கிமீ வேகத்தில் சோதனை

Editorial
0
அதிராம்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் பாதையில் மணிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இன்று காலை 8-30 மணி முதல் 11-25 மணிக்குள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி  ரயில்பாதையிலும் நண்பகல் 12-00மணியிலிருந்து பிற்பகல் 1-30 மணிக்குள் திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில் பாதையிலும் இருப்புபாதை உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் ஓ.எம்.எஸ். அதிவேக ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் மணிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

முன்னதாக இந்த ரயில் பாதை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பது, ரயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, மூடி இருக்கும் ரயில்வே கேட் வழியாக  நடந்து செல்வது, இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, வேகமாக செல்லும் ரயில் அருகில் சென்று செல்போன் மூலம் போட்டோ ,வீடியோ, செல்ஃபி எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ரயில் பாதை அருகில் செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.

ஈ.சி.ஆர். ரயில்வே கேட் அருகே முன் கூட்டியே வாகங்கள் நிறுத்தப்பட்டு ரயில் சென்றது. இதனை வீடியோ எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...