அதிரை நகராட்சியில் இருந்து மக்களுக்கு பறக்கும் போன் கால்.. ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்க வற்புறுத்தல்

Editorial
0
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டால் இணைக்கலாம் எனவும் தேர்தல் ஆணையமும், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் அறிவித்தாலும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் இதை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக அதிரையிலும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. ஆனால், இந்த இணைப்பால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை அதிரை பிறையில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

இதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் அதிராம்பட்டினத்தில் குறைவான அளவிலேயே ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே இதை அதிகரிக்க வீடு வீடாக சென்று வந்த நகராட்சி அதிகாரிகள் தற்போது இணைக்காதவர்களின் செல்போன் எண்களை தொடர்புகொண்டு எச்சரிக்கிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நம்மிடையே பேசிய அதிரையை சேர்ந்த நபர், "நகராட்சியில் இருந்து எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது. ஒரு பெண் அதிகாரி பேசினார். 'ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவில்லையா?' என்று கேட்டார். நான் தேர்தல் ஆணையமே கட்டாயமில்லை என்று சொல்லிவிட்டதே என்று கூறினேன். 'அதெல்லாம் இல்லை, மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார். நான் மீண்டும் போன் செய்வேன்.' என்றார்." என நம்மிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாம் அந்த அதிகாரியின் தொடர்பு எண்ணை வாங்கி, இது கட்டாயமில்லை என தேர்தல் ஆணையம், மத்திய அமைச்சர் சொன்னதை சுட்டிக்காட்டி, விருப்பப்பட்டால் இணைக்கலாம் என்று இருக்கும்போது கட்டாயப்படுத்தி சரிதானா? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு முடிவெடுக்கும் உரிமை இல்லையா? என நாம் கேட்டோம். அதற்கு, "மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தில் குறைவான அளவிலேயே இணைத்துள்ளார்கள். எனவேதான் இன்று போன் செய்து இணைக்க சொன்னேன். சந்தேகம் இருந்தால் கவுன்சிலரிடம் பேசிக்கொள்ள கூறினேன். மிரட்டவில்லை. 10 மணிக்கு மேல் அந்த நபர்தான் எனக்கு போன் செய்வதாக சொன்னார்." என்றார்.

கட்டாயம் இல்லாத ஒரு விசயத்தை மக்களிடம் நகராட்சி இப்படி கட்டாயப்படுத்துவது ஏன்? ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காதவர்களின் தொடர்பு எண் எப்படி கிடைத்தது? எப்படியென்றால் வாக்காளர்களின் தொடர்பு எண்கள் எவ்வாறு நகராட்சிக்கு கிடைத்தது? இது சட்டப்படி சரியானது தானா? ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பின் மூலமாக வாக்காளர் தகவல்கள் திருடப்படும் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரனின் அச்சம் உண்மையானதுதானா? என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது.

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பின் விபரீதம் தொடர்பான முழு விபரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்:



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...