அதிரை மக்களை "பயமுறுத்தாதீர்கள்".. அதிரை பிறைக்கு நகராட்சி ஆணையர் குமார் அறிவுரை! நாம் அளித்த பதில் இதுதான்

Editorial
0
நாடு முழுவதும் ஆதார் - வாக்காளர் அடையாளர் அட்டை இணைப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிராம்பட்டினம் ஜும்மா பள்ளிகளிலும், வேறு சில மசூதிகளிலும் இது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளார்கள். 

பல இடங்களில் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு தொடர்பாக நமது உச்சநீதிமன்றம், மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.சி.பானர்ஜி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை நமது அதிரை பிறையில் பதிவிட்டிருந்தோம்.

இந்த நிலையில், அதிரை பிறையின் முகநூல் பதிவின் கீழ் அதிரை நகராட்சி பொறுப்பு ஆணையர் குமார் கருத்திட்டுள்ளார். அதில், "தங்களது பதிவு மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவை, குடிநீர், தெரு வளக்கு, சுகாதார பணி கிடைக்கவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். ஆதார் இணைப்பு சம்பந்தமாக தேவையான சந்தேகங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். தேவையற்ற கருத்தை பதிவிட்டு அதிரை பொது மக்களை  பயமுறுத்தாதீர்கள். அனைவரும் ஒன்றினைந்து நகரத்தை மேம்படுத்த, புகழடைய, பாடுபடுவோம். இது சம்பந்தமாக பேச அழைத்தால் தங்களை சந்திக்க தயாராக உள்ளேன்." என்றார்.

அதற்கு நாம், "உங்கள் கருத்துக்கு நன்றி. நாம் குறிப்பிட்டுள்ள தகவல் சொந்த கருத்து அல்லது. உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஓய்வுபெற்ற நீதிபதி உடையது. தற்போது ஆளும் திமுக அரசும் தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்துள்ளது. மக்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று சொல்வதுதான் ஊடகம். அதை நாங்கள் சரியாக செய்கிறோம் என்று நம்புகிறோம்." என்று பதிலளித்தோம்.
பொதுவாக அதிரை ஊடகங்களில் எத்தனையோ கோரிக்கை பதிவுகளை வெளியிட்டாலும் முன்பு பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், இஓக்கள் கண்டும் காணாமலும் இருப்பார்கள். ஆனால் நகராட்சி ஆணையர் குமார் இப்படி கருத்திட்டு விளக்கம் தர அழை
அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை ஒரு ஆரோக்கியமான நடைமுறையாக பார்க்கிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...