சபரிமாலா மட்டும்தான் கிஸ்வாவை நெய்தாரா? நடிகை சனா கான் நெய்தது உண்மையா? - கஃபாவின் திரை கிஸ்வா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Editorial
0


மக்கா: சபரிமாலாவுக்கு எப்படி கஃபாவை மூடும் கிஸ்வா துணி நெய்ய வாய்ப்பு கிடைத்தது என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரிடம் எழுப்பி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு திரும்புவதாக அறிவித்து சினிமாவிலிருந்து விலகிய நடிகை சனா கான் கடந்த ஆண்டு உம்ரா சென்றிருந்தபோது கிஸ்வா துணியை நெய்திருக்கிறார்.


இதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் உம்ராவுக்கும் அழைத்து சென்ற நிறுவனத்துக்கும் அவர் நன்றி தெரிவித்து உள்ளார். கிஸ்வா துணி ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை காலத்தில் மாற்றப்படுகிறது. 658 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கஃபாவை திரையிடும் இந்த கிஸ்வா துணியை 137 தொழிலாளர்கள் 8 மாதங்களாக நெய்து தயாரித்து வருகின்றனர்.

இதற்காக இத்தாலியிலிருந்து எடுத்துவரப்படும் உயர்தர பட்டு நூலும், அதில் திருக்குர்ஆன் வசனங்கள் காலிகிராபி அரபு எழுத்து வடிவில் நெய்வதற்காக ஜெர்மனியிலிருந்து எடுத்து வரப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நூலும் பயன்படுத்தப்படுகின்றன. கிஸ்வாவின் மொத்த எடை 670 கிலோ. அதில் தங்க நூலின் எடை மட்டும் 15 கிலோவாகும்.


முஹம்மது நபி காலத்தில் வெள்ளை, சிவப்பு நிற கோடு போட்ட ஏமன் நாட்டு துணியை கொண்டு கஃபா மூடப்பட்டது. அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான்(ரலி) ஆட்சிகாலத்தில் வெள்ளை நிறத்திலான கிஸ்வா பயன்படுத்தப்பட்டது. இப்னு அல்-ஜுபைர் ஆட்சியில் அது சிவப்பாகவும், அப்பாசியாக்கள் ஆட்சியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், செல்ஜுக் சுல்தான் ஆட்சியில் மஞ்சள்,  கலிபா அல் நசீர் ஆட்சியில் பச்சை என பல வண்ணங்களில் கிஸ்வா இருந்துள்ளது.


இந்த கருப்பு நிற கிஸ்வாவை பொறுத்தவரை 1962 ஆம் ஆண்டு வரை எகிப்திலிருந்து தயாரித்து கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் இன்னும் எகிப்தில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அது மக்காவில் உள்ள அவும் அல் ஜூத் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிப்பதற்காக மட்டும் ₹45.8 கோடி செலவிடப்படுகிறது.

(கிஸ்வா தயாரிப்பு முறை குறித்து வாய்ப்பு இருந்தால் அடுத்த பதிவில் காணலாம்)

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...