அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நகராட்சி முற்றுகை போராட்டத்துக்கு SDPI முழு ஆதரவு

Editorial
2
அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரை நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி வார்டு மறுவரையறை நடந்திருப்பதாகவும் விடுமுறை நாளன்று, நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும் கூறி கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நகராட்சி அலுவககத்தை முற்றுகையிட்டு SDPI கட்சி போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட பகுதிகளில் அநீதமான முறையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து வரும் ஜனவரி 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் முற்றுகை போராட்டத்திற்கு SDPI கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிராம்பட்டினத்தில் அவசர கதியில் வார்டு மறுவரை செய்தது மக்களாட்சிக்கு எதிரானது. இதனால் அதிகமான குளறுபடிகள் ஏற்பட்டு அதிரை மக்களுக்கான போதிய பிரதிநிதிதுவம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷம்சுல் இஸ்லாம் சங்க பகுதியில் அனைத்து வார்டுகளையும் பெண்கள் வார்டாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா வாசிகள் நடத்தும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு SDPI கட்சி முழு ஆதரவு ஆளிக்கிறது." என தெரிவித்துள்ளது. 

Post a Comment

2Comments
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...