அதிரை காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் ஜியாவுத்தீன் வஃபாத்

Editorial
2

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் ஜியாவுதீன் தஞ்சையில் வண்டியை நிறுத்திவிட்டு போன் பேசிக்கொண்டிருந்தபோது, செல்பேசியை பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர். அவர்களை விரட்டிச் செல்லும் வழியில் கீழே விழுந்த ஜியாவுத்தீன் அவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். 

இவர் குறித்து, கோவை அப்துல் அஜீஸ் பாகவி எழுதிய நெகிழ்ச்சியூட்டும் பதிவு, 

"அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர் தஞ்சை ஜியாவுதீன் வழிப்பறியர்களுடனான போராட்டதில் சாலை விபத்தில் படுகாயமுற்றிருக்கிறார். எனும் செய்தி பெருங் கவலையை தருகிறது.

ஆலிம்களின் மீது  நேசம் கொண்டவர். அவர்களுக்காக பணியாற்றுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.  கல்லூரிப் பேராசிரியராக இருந்தாலும் ஒரு மாணவரைப் போன்று துடிப்பானவர். 

மதுரை தாருல் உலமா திறப்பு விழாவின் போது விருந்தினர்களுக்கு தஞ்சாவூர் தட்டு பரிசளிக்கலாம் என்று முடிவு செய்த போது ஓரிரு நாட்களில் அந்தப் பணியை வெகு சிறப்பாக முடித்துக் கொடுத்தார். ஒரு பணியை ஏற்றுக் கொண்டால் அதில் எவ்வளவு அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதற்கான முன் மாதிரி அவர்.

கடந்த பிப்ரவரியில் ஒரு முற்பகல் நேரத்தில் அம்மாபட்டினம் போய்க்கொண்டிருக்கிறேன் என்றேன். சிறிது நேரத்தில் தொடர்பு கொண்டு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து விட்டேன் என்றார். அதிராம்பட்டினம் சென்ற போது காத்திருந்து வரவேற்று அவரது துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் அறிமுகப்படுத்திய  விதத்தில் " அல்லாஹ்வுக்காக நேசித்தல் " என்பது இது தானோ என்று தோன்றியது.

அறந்தாங்கியில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொதுக்குழு நடைபெறுவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே 23-ஆம் தேதி நாம் அறந்தாங்கியில் சந்திக்கலாம் என்றார். இவர் எப்படி அங்கு வருவார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். பிப்ரவரி 23-ஆம் தேதி அறந்தாங்கி  மண்டபத்திலிருந்து போன் செய்து  நான் வந்துவிட்டேன் என்றார். நீங்கள் எப்படி உள்ளே செல்ல முடிந்தது? என்று கேட்டேன் ஆலிம்களுக்கு டிரைவராக வந்தேன் என்று சொன்னார். சொந்த வண்டிக்கு டிரைவர் பணியாற்றியவர்."

Post a Comment

2Comments
  1. Very very unfortunate...Can't tolerate such an tragic end to a noble person like him.
    .Inna lillahi wa Inna ilaihi rajioon.

    May Almighty Allah forgive his shortcomings and bless him His choicest place in Jannat-ul-firdaus

    ReplyDelete
  2. Very very unfortunate...Can't tolerate such an tragic end to a noble person like him.
    .Inna lillahi wa Inna ilaihi rajioon.

    May Almighty Allah forgive his shortcomings and bless him His choicest place in Jannat-ul-firdaus

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...