அதிரையில் 100% அனைத்து வரிகளையும் செலுத்தி மக்கள் சாதனை

Editorial
0

அதிராம்பட்டினம் சிறப்புநிலை பேரூராட்சியில் 100 சதவீத சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி மக்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த வரிகளை மக்கள் முறையாக செலுத்தினால் மட்டுமே பேரூராட்சி நிர்வாகத்தால் திறம்பட செயலாற்ற முடியும். பொதுநலப்பணிகளில் நிதியை செலவிட இயலும். அந்த வகையில், பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து 100% வரியை செலுத்தி மக்கள் தங்கள் சமூக பொறுப்பை பறைசாற்றியுள்ளனர். 

100% வரி வசூலுக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், பேரூராட்சி பணியாளர்கள், மற்றும் அனைத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...