அதிரையில் ரயில் சேவை தொடங்க ரயில்வே அமைச்சரிடம் எம்.பிக்கள் கோரிக்கை

Editorial
0


தெற்கு இரயில்வே திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதையில் இரயில்களை இயக்கிட   இரயில்வே அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.

திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான  மீட்டர் கேஜ் இரயில் பாதையாகும்.

இந்த மீட்டர் கேஜ் பாதை  அகல இரயில் பாதையாக  மாற்றப்பட்டு 2019 ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை க்கான விரைவு இரயில்சேவை 2006 ல் நிறுத்தப்பட்டது. அகல இரயில் பாதை பணிகள் நிறைவுற்ற பின்னரும் இத்தடத்தில் முழுமையான இரயில் சேவை துவங்கப்படவில்லை. 

எனவே இத்தடத்தில்  இரயில் சேவைகளை தமிழ் புத்தாண்டில்  துவங்கவேண்டி இரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் மற்றும் இரயில்வே வாரியத்தலைவர் சுனித் சர்மா ஆகியோரை  10.02.2021 மாலை  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர் ( திருச்சி தொகுதி), எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தஞ்சாவூர் தொகுதி), எம்.செல்வராஜ் (நாகப்பட்டினம் தொகுதி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை தொகுதி), நவாஸ்கனி (இராமநாதபுரம் தொகுதி), தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ஹிதாயத்துல்லா அறந்தாங்கி வட்ட இரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் ஏ.பி.இராஜ்குமார் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். ஷிகாபுதீன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோரிக்கை மனுவில், திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு  போதுமான கேட் மேன்களை நியமனம் செய்ய வேண்டும்.

மீட்டர் கேஜ் இரயில் பாதையில் இயங்கிய சென்னை காரைக்குடி இரவு நேர  கம்பன் விரைவு இரயிலை இயக்க வேண்டும்.

மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையிலும் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மதுரை வரை பயணிகள் பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.

இரயில்வே நிர்வாகம் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ள தாம்பரம்- செங்கோட்டை மற்றும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு இரயில்களை இயக்க வேண்டும்.

இத்தடத்தில் விவசாயிகள் மீனவர்கள் வியாபாரிகளுக்கு பயன் படும் வகையில் சரக்கு இரயில்களையும் இயக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட இரயில்வே அமைச்சர் விரைந்து ஆவன செய்வதாக உறுதி அளித்தனர். 

மேலும் இரயில்வே போர்டு சேர்மன் உடனடியாக தொலைபேசி மூலம் தென்னக இரயில்வே பொது மேலாளரை தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்ட மாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரயில் உபயோகிப்போர் சங்க பிரதிநிதிகள் இணைந்து சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்து இப்பணிகளை துரிதப் படுத்த முடிவு செய்துள்ளனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...