அதிரையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த அனைத்து முஹல்லா தீர்மானம்

Editorial
1
அதிரையில் ஆற்று மணல் விலை அதிகரித்துள்ளது தொடர்பாக இன்று 30.08.2020 அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் மாதாந்திர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெசவுத் தெரு சங்கத்தில், தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையிலும், பிற முஹல்லா நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:

தீர்மானம் 1:
நமதூரில் சமீபகாலமாக ஆற்று மணல் விற்பனை விலை அதிகரித்துள்ளது. இவ்விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரி, AAMF-ற்கு நமதூர் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாய இயக்கத்தினர் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை பரிசீலித்த AAMF நிர்வாகம், நமதூரில் நடைபெற்று வருகிற கட்டுமான பணிகளை ஒரு குறிப்பிட்ட காலம் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2:

மேற்காணும் முடிவை செயல்படுத்த வருகிற 01.09.2020  செவ்வாய் கிழமை அன்று காலை 11:00 மணியளவில், நமதூரில் உள்ள கட்டுமான பணியாளர்கள் சங்கம், அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், அருகாமை கிராம தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் AAMF-ன் சார்பாக நடத்தி இறுதி முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

தகவல்:
AAMF நிர்வாகம்.

Post a Comment

1Comments
  1. மாஷா அல்லாஹ் மிகவும்
    சிறப்பான முடிவு உங்கள் முயற்சியில் அல்லாஹ் வெற்றியை தருவானாக
    ஆமீன்

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...