அதிரையில் குழாயை திறந்த மக்கள்... காத்திருந்த அதிர்ச்சி

Editorial
0
-File image

அதிரை சேதுரோடு பகுதியில் உள்ள வீடுகளில் இன்று மாலை குழாயில் கழிவு நீர் வந்துள்ளது. பேரூராட்சி குடிநீர் இணைப்பில் விநியோகிக்கப்படும் இந்த தண்ணீர் இன்று மாலை சாம்பல் நிறத்தில் வந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலத்தேரு நீர் தேக்க தொட்டியில் இருந்து சேதுரோடு, ஹாஜா நகர், கடற்கரைத் தெரு, தரகர் தெரு, புதுத்தெரு, தைக்கால் தெரு போன்ற பகுதிகளுக்கு நிலத்தடி குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.

இதனை மோட்டார் பம்ப் மூலம் வீட்டு நீர் தேக்க தொட்டியில் நிரப்பி மக்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில், இன்று விநியோகிக்கப்பட்ட தண்ணீரில் கழிவு நீரும் கலந்துள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இணையதள இணைப்புக்காக நிலத்தடியில் கேபிளை புதைக்க குழி தோண்டும்போது தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அத்துடன் அருகில் ஓடும் கழிவு நீர் கலந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழத்தெருவிலும் கழிவு நீர் கலந்து வந்தது குறிப்பிடத்தக்கது. நோய் பரவல் அதிகரித்து உள்ள இக்காலத்தில் சுகாதாரமான தண்ணீர் அவசியமானது. இந்த சூழலை உணர்ந்து தூய்மையான தண்ணீரை விநியோகிப்பதுடன், நிலத்தடியில் உள்ள தண்ணீர் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கேபிள்கள் புதைக்க குழி தோண்ட உத்தரவிட வேண்டும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...