"அதிரை மக்கள் இனிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"

அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் 20 நபர்களை கொரோனா தொற்று உள்ளாதாக கூறி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் படிப்படியாக 19பேர் குணமடைந்து விடுவிக்கப்பட்டனர்.

இதிக் 44 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இஸ்மாயில் என்பவர் இன்று மாலை 4 மணியளவில் ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் கொண்டுவரப்பட்டார்.

அவரை வரவேற்க்கும் நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் இன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது தம்பி மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், காவல்துறை அதிகாரிகள் உறவினர்கள் வரவேற்றனர்.

பின்னர் அதிரை பிறைக்கு பேட்டியளித்த ஹாஜா அலாவுத்தீன், அதிரையில் கொரோனா வராமல் தடுக்க மக்கள் இனிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments