அதிரை கேஸ் ஊழியர்கள் அடாவடி... ரூ.80 கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல்

Editorial
0
அதிரையில் அனைவருக்கும் தெரிந்தும் தடுக்க முடியாத பகல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்றால் கேஸ் டெலிவரி ஊழியர்கள் செய்வது தான். இண்டேன் கேஸ் ஏஜென்சி சமையல் எரிவாயு சிலிண்டரை வீடுகளுக்கு ஊழியர்கள் விநியோகம் செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கான கூலி, வரி உட்பட அனைத்துக்குமான அடக்க விலை இண்டேன் கேஸ் நிறுவன ரசீதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், கேஸ் ஊழியர்களோ ரசீதுக்கு ₹30 அதிகம் கேட்டு கட்டாயப்படுத்தி பணத்தை பெற்றுச்செல்வார்கள். காலப்போக்கில் இந்த கூடுதல் கட்டணம் ₹40, ₹50 வரை உயர்ந்தது. இதுகுறித்து பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் கேஸ் விநியோக ஊழியர்கள் மேலும் அடவாடியில் இறங்கினர். 

பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இருப்பதால் பிரச்சனைக்கு பயந்து அவர்கள் பணத்தை கொடுத்து விடுகின்றனர். விபரம் அறிந்தவர்கள் இதனை தட்டிக் கேட்டால் வீடு பூட்டிக்கிடக்கிறது எனக்கூறி கேஸ் புக்கிங்கை ரத்து செய்து விடுகின்றனர் கேஸ் டெலிவரி ஊழியர்கள்.

தற்போது கேஸ் விலை ரூ.550 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  இதில் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கான கட்டணமும் அடக்கம். ஆனால், இன்று நமதூரில் ஒருவீட்டில் கேஸ் விநியோகித்த ஊழியர் ஒருவர் ₹80 கூடுதல் கட்டணமாக கேட்டு மிரட்டியுள்ளார். அதாவது ₹550 மதிப்பிலான எரிவாயு சிலிண்டருக்கு ₹630 கேட்டுள்ளார் அந்த ஊழியர். சம்பந்தப்பட்ட வீட்டார் அதை எதிர்த்தபோது ₹630 தர வேண்டும் என வலுக்கட்டாயமாக வாங்கிச்சென்று உள்ளார் அந்த ஊழியர். இதுகுறித்து இண்டேன் கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...