அதிரையில் ஊரடங்கை பின்பற்றி CAA, NRC, NPR-க்கு எதிராக பட்டம் விட்டு எதிர்ப்பு!

Editorial
0
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்த சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஷஹீன் பாக் தொடர் போராட்டங்கள் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. சுமார் 30 நாட்கள் நடந்த போராட்டத்தில் மக்கள் பல தகவல்களை அறிந்துகொண்டனர்.
ஆனால், இப்போது கொரோனா பீதி அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்துள்ளது. அந்த அளவுக்கு ஊடகங்களை கொரோனா செய்திகள் ஆக்கிரமித்து உள்ளன. இப்படியே போனால் 30 நாட்களாக சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு எதிராக போராட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வை மக்கள் மறந்து போகும் சூழல் உருவாகும். இதற்கும் முந்தைய பல நிகழ்வுகளை உதாரணமாக கூறலாம்.
எனவே ஊரடங்கையும் மீறாமல், வேறு விதத்தில் போராட்டங்களை நாம் நடத்தி மக்களுக்கு இதுபற்றி நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் கொரோனா பாதிப்பெல்லாம் குறைந்த பிறகு அடுத்தக்கட்ட ஷஹீன் பாக் போராட்டத்துக்கு அழைக்கும்போது மக்கள் வருவார்கள்.
தற்போதைய சூழலில் கூட்டமாக திரண்டு போராடினால் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை மீறாமல், சுகாதார அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் போராட்டத்தின் கோணங்களை மாற்றலாம்.
அதை பின்பற்றுவதோடு வேறு சில வித்தியாசமான நூதன போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்து சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். கருப்பு பலூன் விடுவது, கோலம் போடுவது போராட்டங்கள் பெரிய கூட்டமின்றி நடத்தப்பட்டன.
அந்த வகையில், அதிரையில் NO CAA, NRC, NPR என எழுதப்பட்ட பட்டத்தை விட்டு நூதன முறையில் சிலர் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். அது போல் அனைவரும் வீடுகளில் பட்டங்களை தயாரித்து நாள்தோறும் மாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டங்களை கூட்டமாக கூடாமல் ஒவ்வொரு வீடுகளின் மாடியிலும் விடலாம். இது ஊரடங்கை மீறியதாகவும் அமையாது. கூட்டம் கூடியதாகவும் இருக்காது. அத்துடன் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தி வீடுகளுக்கு மக்களை இருக்க வலியுறுத்தி #STAY HOME, STOP CORONA என்பதையும் எழுதி பட்டம் விடலாம்.
முக்கிய குறிப்பு: மிக முக்கியமாக தடை விதிக்கப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தாமல் சாதாரண நைலான் நூலை பயன்படுத்தி எதிர்ப்பை காட்டலாம். எதிர்ப்பை காட்டுவதாக அமையாது. யாதுக்கும் ஆபத்தை ஏற்படுத்திட கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...