அதிரை கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாகிவிட்டது என செய்தி வெளியிட்ட அதிரை தளம் - உண்மை என்ன?

Editorial
0


நேற்று அதிரையை சேர்ந்த ஒரு வலைதளத்தில் "கரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய அதிராம்பட்டினம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!"என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதை நமக்கு வாசகர்கள் சிலர் அனுப்பி அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரித்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்தத் தலைப்பின் லிங்கை கிளிக் செய்து முழு செய்தியை நாம் படித்தபோது தலைப்புக்கும் செய்திக்கும் வேறுபாடு இருந்ததை உணர முடிந்தது. படத்துக்கு கீழே உள்ள முதல் வரிகளில் அதிராம்பட்டினம் நோய் பாதிப்பு இல்லாத பகுதியாக மாறி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பில் மாறிவிட்டது குறிப்பிட்டு உள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இந்த செய்தி பகிரப்படும் போது வெளியில்  தலைப்பு மட்டுமே தெரியும் அதை  பார்த்த பலரும் தவறாக புரிந்து கொண்டு முழு செய்தியையும் படிக்காமல் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த தளத்தில் வெளியான செய்தியில் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி வருபவர்கள் பற்றிய  கணக்கு குறிப்பிடப்பட்டு உள்ளது. பெரும்பாலானவர்கள் குணமைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மற்றபடி அதிரையை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதம் உள்ளவர்களும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட இந்த செய்தியில் உள்ளே உள்ள தகவல் சரியாக இருந்தாலும் தலைப்பு வேறுவிதமாக இருந்ததால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

ஏனெனில் சிலர் தலைப்பை மட்டும் படித்து தவறாக புரிந்து கொண்டு சமூக விலகலை கடைப்பிடிக்காமல்,  தேவையின்றி வெளியில் வந்தாலோ கும்பலாக கூடினாலோ மீண்டும் நோய் பரவும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே செய்தியை முழுமையாக படித்துவிட்டு தெளிவு பெறுங்கள். 

பல இணையதளங்களில் தலைப்புக்கு தொடர்பில்லாத தலைப்புகளை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே லிங்கை கிளிக் செய்து செய்தியை முழுமையாக படித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் தலைப்பை மட்டும் வாசித்துவிட்டு வெளியில் பகிர்வது தவறான விளைவுகளை உண்டாக்கும்.

ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை:

குணமடைந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் படங்கள்:


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...